[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

இன்றைய முக்கியச் செய்திகள்!  

today-top-news

பொருளாதார வளர்ச்சிக்கு மாநிலங்களின் பங்களிப்பு முக்கியமானது என்று ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற வர்த்தகம் தொடர்பான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஒட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டம் - ஒழுங்கை கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அன்பு தான் ஆர்எஸ்எஸ் கொள்கையின் முக்கிய அங்கம் என்று ‌நாக்பூரில் நடைபெற்ற‌ நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத்‌ தெரிவித்துள்ளார்.

அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் துணை முதல்வர் ஓபிஎஸ். முதலீடுகளை ஈர்ப்பது ‌உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 54 பேரும் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கும்நிலையில், பாஜக முக்கிய நிர்வாகிகள் ஆளுநருடன் சந்திப்பு நடத்தினர்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு செய்யக்கூடாது என்று சிஐஐ மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிவில் இன்று முதல் லட்டு பிரசாதம் அறிமுகபடுத்தப்படுகிறது.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் தொடக்கி வைக்கிறார்.

வங்கதேச அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில் ரோகித் ஷர்மாவின் அசத்தல் ஆட்டத்தால் இந்திய அணி வெற்றிப் பெற்றது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close