[X] Close
JUST IN

நவ. 24ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் 

aiadmk-general-body-meet-at-november-24

அதிமுகாவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுகாவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அக்கட்சி அதிகாராப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை வானகரத்தில் ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் வரும் 24ஆம் தேதி காலை 10.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களான ஓபிஎஸ்-ஈபிஎஸ் வெளியிட்டுள்ளனர். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close