[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

பார்வைத்திறன் குன்றியவர்களுக்காக பிரெய்லி மேப் முறை - கோவை ரயில்நிலையத்தில் அறிமுகம்

braille-board-introduced-in-covai-railway-station

பார்வைத்திறன் குன்றியவர்கள் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் போது, ‌அவர்கள் பயன்பெறும் வகையில் கோவை ரயில் நிலையத்தில் பிரெய்லி மேப் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில் அறிமுகம் செய்துள்ள இந்த வசதி வரவேற்பை பெற்றுள்ளது.

சேலம் ‌ரயில்வே கோட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் உள்பட 74 ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ரயில்வே பயணிகளை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்றவாறு செயல்பட்டு வரும் கோவை ரயில் நிலையத்தில், பார்வைத்திறன் குன்றியவர்களுக்கென பிரெய்லி‌ மேப் முறையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

பிரெய்லி எழுத்து வடிவம் கொண்ட பலகை ரயில் நிலையத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்‌ளது. இதில், டிக்கெட் கவுன்டர், தகவல் மையம் ஆகியை எளிதில் கண்டறிய மிகவும் பயனுள்ளதாக அமைந்திருப்பதாக பார்வை மாற்றுதிறனாளிகள் கூறுகின்றனர்.

ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ள பிரெய்லி பலகை, தமிழ் மொழியிலும் வைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அனைத்து ரயில் நிலையங்களிலும் இதனை கொண்டு வர வேண்டும் என்றும் ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.

ரயில்வே நிர்வாகம் இதுபோன்ற முயற்சி எடுத்திருப்பது பார்வை மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close