கரூர் மாவட்டத்தில் தொழிலதிபரை காருடன் தீ வைத்து எரித்துக் கொன்றதாக, அவரது மனைவியும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
க.பரமத்தி அருகே சாலையோரத்தில் எரிந்த நிலையில் நின்றுகொண்டிருந்த காரில், முற்றிலும் எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து க. பரமத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், காருடன் எரித்துக் கொல்லப்பட்டது, நொய்யலைச் சேர்ந்த பேருந்து பாடி கட்டும் நிறுவன உரிமையாளர் ரங்கசாமி என்பது தெரியவந்தது. வேறு ஒரு பெண்ணுடன் முறையற்ற உறவு வைத்திருந்த ரங்கசாமி, அவர் மனைவி கவிதாவைத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் மனைவி கவிதா, மகன் அஸ்வின் குமாருடன் சேர்ந்து, அவரைக் கழுத்தை நெறித்துக் கொன்று காருக்குள் போட்டுவிட்டு, பரமத்தி அருகே நிறுத்தி தீ வைத்தது தெரியவந்தது.
அம்மாவையும் மகனையும் போலீசார் கைது செய்தனர். வேறு ஒரு பெண்ணுடன் முறையற்ற உறவு வைத்திருந்த ரங்கசாமி, தன்னை துன்புறுத்தி வந்ததால், இந்தக் கொலை செய்ததாக போலீசாரிடம் கவிதா கூறியுள்ளார்.
‘பாலியல் வன்கொடுமை நடந்தபின் வா’ புகாரளிக்க வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய போலீசார்
டெல்லி தொழிற்சாலை தீ விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது
"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்" சுப்ரமணியன் சுவாமி
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் அறிவிப்பு
கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் !