[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனம் காட்டியதாக 50 தற்காலிக பணியாளர்கள் டிஸ்மிஸ்: வேலூர் ஆட்சியர் நடவடிக்கை
  • BREAKING-NEWS ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவை வரும் 22-ஆம் தேதி வரை வெளியிட தடை நீட்டிப்பு
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்

தகாத உறவால் தொல்லை: தொழிலதிபரை எரித்துக்கொன்ற மனைவி, மகனுடன் கைது!

wife-son-arrested-for-karur-businessman-murder

கரூர் மாவட்டத்தில் தொழிலதிபரை காருடன் தீ வைத்து எரித்துக் கொன்றதாக, அவரது மனைவியும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

க.பரமத்தி அருகே சாலையோரத்தில் எரிந்த நிலையில் நின்றுகொண்டிருந்த காரில், முற்றிலும் எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து க. பரமத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், காருடன் எரித்துக் கொல்லப்பட்டது, நொய்யலைச் சேர்ந்த பேருந்து பாடி கட்டும் நிறுவன உரிமையாளர் ரங்கசாமி என்பது தெரியவந்தது.  வேறு ஒரு பெண்ணுடன் முறையற்ற உறவு வைத்திருந்த ரங்கசாமி, அவர் மனைவி கவிதாவைத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் மனைவி கவிதா, மகன் அஸ்வின் குமாருடன் சேர்ந்து, அவரைக் கழுத்தை நெறித்துக் கொன்று காருக்குள் போட்டுவிட்டு, பரமத்தி அருகே நிறுத்தி தீ வைத்தது தெரியவந்தது. 

அம்மாவையும் மகனையும் போலீசார் கைது செய்தனர். வேறு ஒரு பெண்ணுடன் முறையற்ற உறவு வைத்திருந்த ரங்கசாமி, தன்னை துன்புறுத்தி வந்ததால், இந்தக் கொலை செய்ததாக போலீசாரிடம் கவிதா கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close