[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

தனியாக வசித்த ஓய்வுபெற்ற ஆசிரியை..! நகை, பணத்திற்காக நேர்ந்த கொடூரம்..!

retried-teacher-murdered-in-thiruvannamalai

திருவண்ணாமலையில் தனியாக வசித்து வந்த ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த முனியதாங்கல் பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை லூர்துமேரி (69). இவர் திருமணம் ஆகாமல், வீட்டில் தனியாக வசித்து வந்தார். லூர்துமேரி உறவினர்கள் வெளிநாட்டிலும், வெளிமாநிலத்திலும் வசித்து வருகின்றனர். யாருமின்றி தனியாக வசித்து வரும் லூர்துமேரியை நோட்டமிட்ட சில மர்ம நபர்கள், நேற்று நள்ளிரவு அவரது வீட்டிற்குள் புகுந்தனர். நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த அவர்கள், லூர்துமேரியை கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி லூர்துமேரி ஆசையாக வளர்த்த நாயையும் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து லூர்துமேரி இறந்து கிடப்பதைக் அறிந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் மோப்பநாய் ‘மியா’ வரவழைக்கபட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது மோப்பநாய் வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலம் மற்றும் சாலைகள் வரையில் சென்றபோதும், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதனைத்தொடார்ந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர். தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை நகை, பணத்திற்காக நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close