[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த காவலர்: போலீஸ் முன்னிலையில் தாலி கட்ட வைத்த பெண் காவலர்

police-lovers-marrige-in-temple-hosur

காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த காவலரை ஒரு பெண் காவலர் ஒருவர் போலீசார் முன்னிலையில் தாலி கட்ட வைத்துள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள பாண்டுரங்கன்தொட்டியை சேர்ந்தவர் கண்ணன். இவர் மோப்பநாய் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவரது உறவினரான நதியா என்ற பெண் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார்.

இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில், நதியாவை திருமணம் செய்து கொள்ள கண்ணன் மறுத்ததாக கூறப்படுகிறது. தான் ஏமாந்துவிட்டதாக புலம்பிய நதியா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த உறவினர்கள் உடனடியாக நதியாவை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா விசாரணை மேற்க்கொண்டதையடுத்து கண்ணன் நதியாவுடன் சேர்ந்து வாழ சம்மதித்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில், காதலர்களான இரண்டு காவலர்களும் தேன்கனிக்கோட்டை கவி நரசிம்ம சுவாமிக்கோவிலில் போலீசார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். காதலன் ஏமாற்றியதாக தற்கொலைக்கு முயன்ற நதியா சாவின் விழிம்புவரை சென்று, மீண்டும் காதலனையே கரம் பிடித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close