கரூர் பரமத்தி அருகே காருக்குள் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. கொலையா விபத்தா என பரமத்தி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்குச்சாலை பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் இதே ஊரில் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு சொந்தமான ஆல்டோ கார் பரமத்தி அருகே உள்ள குப்பம் பகுதியில் எரிந்த நிலையில் கிடந்தது. அந்த காருக்குள் ஒரு ஆணின் சடலம் எரிந்த நிலையில் இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த பரமத்தி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். காருக்குள் எரிந்த நிலையில் இருந்தது காரின் உரிமையாளரான ரங்கசாமி என உறுதி செய்யப்பட்டது.
காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கார் எரிந்ததா? அல்லது தொழில் போட்டியால் யாரேனும் காரில் வைத்து ரங்கசாமியை கொலை செய்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
‘பாலியல் வன்கொடுமை நடந்தபின் வா’ புகாரளிக்க வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய போலீசார்
டெல்லி தொழிற்சாலை தீ விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது
"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்" சுப்ரமணியன் சுவாமி
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் அறிவிப்பு
கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் !