மதுரையில் காயத்துடன் போராடிய நல்ல பாம்புக்கு மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே முனியாண்டிபுரம் குடியிருப்பு பகுதியில் ஒரு நல்ல பாம்பு நகர்ந்து செல்ல முடியாமல் கிடந்தது. அதன் உடலில் காயங்கள் இருந்ததால் அது உயிருக்கு போராடியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள், திருநகர் ஊர்வனம் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மீட்ட ஊர்வன அமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள், கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் அந்த பாம்பை பரிசோதித்தனர். உடனடியாக முதல் உதவியும் அளிக்கப்பட்டது. பாம்புக்கு அறுவைசிகிச்சை செய்தால் தான் உயிர் பிழைக்கும் என்ற நிலை இருந்ததால், உடனடியாக டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பாம்புக்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு எந்த தடையும் இன்றி ஊர்ந்து சென்ற பாம்பு, தன் இயல்பான குணத்தை வெளிப்படுத்தியது. இதனை அடுத்து புதுக்கோட்டை அருகே உள்ள வனப்பகுதியில் பாம்பு விடப்பட்டது.
சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ.75 கோடி கேட்கும் இஸ்ரோ..!
“சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்”- ப.சிதம்பரத்தை சந்தித்த வைரமுத்து ட்வீட்
“உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை”- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை..!
டெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு
வெங்காயத்தை தொடர்ந்து உச்சத்தில் முருங்கை விலை..!
கைகொடுத்த ஃபேஸ்புக்: 12 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்தினருடன் இணைந்த சிறுமி..!
தனி மனிதராக கிராமத்தை உயர்த்தும் சுப்பிரமணி வாத்தியார்..! தந்தையாகவே கொண்டாடும் ஊர்மக்கள்..!
தெலங்கானா என்கவுன்ட்டர்: போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்..!
நாடாளுமன்றத்தில் வேலை! விண்ணப்பிக்க ரெடியா..?