[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

பஞ்சமி நிலமல்ல என்பதை ஆதாரத்தோடு நிரூபிப்போம் - ஸ்டாலின்

stalin-about-murasoli-issue

முரசொலி அலுவலகம் இருப்பது பஞ்சமி நிலமல்ல என்பதை ஆதாரத்தோடு நிரூபிப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

அசுரன் திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின், 'அசுரன்- படம் மட்டுமல்ல.. பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து ஜாதிய சமூகத்தைச் சாடும், ஜாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்' என பாராட்டி இருந்தார். இதற்கு எதிர்க்கருத்து கிளம்பியது. ''அசுரன்' கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, 'முரசொலி' அலுவலகத்துக்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் ஸ்டாலின் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஸ்டாலின்,

‘முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலமே அல்ல. வழிவழியாக தனியாருக்குச் சொந்தமான பட்டா மனை. பஞ்சமி நிலம் என்று  நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார் என தெரிவித்தார். மேலும் அது பஞ்சமி நிலம் என நிரூபித்தால், அவர்கள் அரசியலை விட்டு விலகத்தயாரா எனவும் கேள்வி எழுப்பினார். 

இதற்கிடையே முரசொலி நில விவகாரத்தில் உண்மையை அறிந்துகொள்ள உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என டெல்லியிலுள்ள தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையத்தில் தமிழக பாஜக செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் புகார் அளித்தார். இது தொடர்பாக தமிழக அரசிடம் பதில் கேட்டது எஸ்.சி., எஸ்.டி., ஆணையம். இதற்கு தமிழக அரசு அளித்த விளக்கம் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “முரசொலி வெறும் நாளேடு மட்டுமல்ல; அது, தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளை மட்டுமல்ல; ஒவ்வொரு கழகத் தொண்டனின் உயிர் மூச்சுமாகும். அதன் மீது, கேவலம், தற்காலிகமான அரசியல் லாபத்திற்காக, பழி சுமத்துவதை நான் மட்டுமல்ல; கழகத்தின் எந்தத் தொண்டரும் ஏற்க மாட்டார்கள்.

"முரசொலி நிலம் குறித்த அபாண்டப் பழியை, உரிய அதிகாரம் படைத்திட்ட ஆணையத்திடம், உரிய நேரத்தில் ஆதாரங்களுடன் வழங்கி, அதன் உண்மைத் தன்மையை நிரூபிப்பேன்!" என, கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளுக்கு உறுதியளிக்கிறேன்.இந்த உறுதியே, வீண் பழி சுமத்துவோர் அனைவருக்கும் இறுதியான பதிலாய் அமையுமெனக் கருதுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close