[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

இன்றைய முக்கியச் செய்திகள்!

today-head-lines

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு 15 நாட்களில் வெளியாகும் என நாங்குநேரி தொகுதியில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் காவல் துறையினர் 11 மணி நேரம் போராட்டம். உயர் அதிகாரிகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கும் நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவருடன் முதலமைச்சர் ஃபட்னவிஸ் பேச்சு. ஆளுநருடன் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் திடீர் சந்திப்பு.

Image result for ஃபட்னாவிஸ்

வங்கக் கடலில் இன்று உருவாகிறது புல்புல் புயல். மீனவர்கள் அந்தமான் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை.

கொல்கத்தாவில் சர்வதேச அறிவியல் திருவிழாவை தொடக்கிவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அடித்தட்டு மக்களுக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகள் சென்றுசேர வேண்டும் என வலியுறுத்தல்.

கால்நடைகளுக்கான சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம். அவசர சிகிச்சைக்கான வசதியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close