[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ்-க்கு 30 நாட்கள் பரோல்: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS முல்லைப்பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறது - மத்திய அமைச்சர்
  • BREAKING-NEWS சீனாவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம்
  • BREAKING-NEWS மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம்: அதிமுக
  • BREAKING-NEWS மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ச இன்று பதவியேற்பு

உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் தற்கொலை முயற்சி - செய்தி அறிந்து மகனும் தற்கொலை

mother-and-son-suicide-in-karur

கரூரில் இடுப்பு எலும்பு முறிவால் அவதிப்பட்ட தாயும்,  தாய் மீது பாசம் கொண்ட மகனும் விஷ மாத்திரை சாப்பிட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

கரூர் அருகிலுள்ள வெங்கமேடு காமராஜர் நகர் பகுதியிலுள்ள புதுக்குளத்துப் பாளையத்தைச் சேர்ந்தவர் அமுதவள்ளி. 55 வயதான இவர், கரூரில் உள்ள தனியார் பள்ளியில், தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் ராஜரத்தினம்(40) கரூரில் உள்ள டெக்ஸ்டைல் ஒன்றில் தொழிலாளாக பணிபுரிந்து வந்தார். ராஜரத்தினம் மனைவி லட்சுமி மற்றும் 12 வயதான  மகனுடன் தனியாக வசித்து வந்தார். 

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் அமுதவள்ளி வழுக்கி விழுந்து இடுப்பில் எலும்பு உடைந்து  வீ்ட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்தார். இதைத்தொடர்ந்து உடல் உபாதையால் அவதிப்பட்ட அமுதவள்ளி நேற்று இரவு விஷ மாத்திரை தின்றுவிட்டார்.

இதையறிந்த, அவரது மகன் ராஜரத்தினமும் விஷ மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தாயும் மகனும் உயிரிழந்தனர். பாசப்போராட்டத்தில் தாயும் மகனும் விஷமாத்திரை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் வெங்கமேடு பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close