[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

பிறந்து 15 நாட்களில் பெண் குழந்தையை ஆற்றில் புதைத்த கொடூர தந்தை! 

man-charged-with-murder-over-death-of-baby

பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம் அடைந்த தந்தை, குழந்தையை ஆற்றில் புதைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சுந்தரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வரதராஜன் - சவுந்தர்யா தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 15 மாதங்களே ஆகின்றன. இந்நிலையில் 15 தினங்களுக்கு முன் இவ‌ர்களுக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்தது பெண் குழந்தை என்று அறிந்த உடனேயே மருத்துவமனையில் இருந்து வரதராஜன் சென்று விட்டார். 

பின்னர் உறவினர்களே சவுந்தர்யாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். வீட்டிற்கு வந்‌த பிறகு 3 ஆவது நாள் வரதராஜன் குழந்தையை எடுத்துச்சென்று தென்பெண்ணை ஆற்றில் புதைக்கச்சென்றதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் பார்த்து குழந்தையை மீட்டு வீட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். வரதராஜனின் நடவடிக்கையால் பயந்துபோன சவுந்தர்யா, குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். 

இந்நிலையில் சமாதானமாக பேசி குழந்தையுடன் சவுந்தர்யாவை வீட்டுக்கு அழைத்து வந்த வரதராஜன், திங்களன்று மாலை, குழந்தையை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று, தென்பெண்ணை ஆற்றில் புதைத்துள்ளார். குழந்தை வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த சவுந்தர்யா உறவினர்களிடம் கூறியுள்ளார். 

வரதராஜன் மீது சந்தேகம் அடைந்த அவர்கள், தென்பெண்ணை ஆற்றில் சென்று பார்த்தபோது புதிதாக தோண்டப்பட்ட பள்ளத்தில் சந்தேகத்தின்பேரில் தோண்டியபோது, குழந்தையை துணியில் சுற்றி புதைத்து வைத்தது தெரியவந்தது. இதனை அடுத்து வரதராஜனை விசாரணை செய்ததில் குழந்தையை புதைத்ததை அவர்தான் என ஒப்புக்கொண்டார். 

தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூர் காவல்துறையினர் வரதராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் குழந்தை என்ற காரணத்தால் பெற்ற குழந்தையை தகப்பனே ஆற்றில் புதைத்து கொன்றது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close