[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

“கணவரின் உடலை மீட்டுத் தாருங்கள்” - கண்ணீருடன் மனைவி 

thiruvarur-foreign-death-petetion

குவைத் நாட்டில் கச்சா எண்ணெய் பிரிக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத்தர வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் மனு அளித்துள்ளார். 

திருவாரூர் மாவட்டம் முகந்தனூர் அருகே மலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (47). இவருக்கு மாதவி என்ற மனைவியும் அக்ஷயா தேவி, பரத் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி குவைத் நாட்டிற்கு தனியார் நிறுவனத்தில் பணி புரிவதற்காக சென்றுள்ளார்

இந்நிலையில், நேற்று சங்கர் பணிபுரியும் கச்சா எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சங்கர் உயிரிழந்துவிட்டதாக ஆலை நிர்வாகம் சங்கரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இன்று சங்கரின் மற்றும் குடும்பத்தினர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் மனு ஒன்றினை கொடுத்தனர். அதில் தனது கணவர் உடலையும் உடமைகளையும் மீட்டுத்தர தமிழக அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close