சென்னை அருகே துப்பாக்கியால் சுடப்பட்ட கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்த முகேஷ், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இன்று தனது நண்பரான விஜய் வீட்டிற்கு சென்றுள்ளார். முகேஷ் மற்றும் விஜய் இருவரும் வீட்டிற்குள் இருந்த நிலையில், விஜய்-யின் அண்ணனான உதயா வெளியே இருந்து கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
சிறிது நேரத்தில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக விஜய் வீட்டை விட்டு வெளியே ஓடி உள்ளார். உதயா உள்ளே சென்று பார்த்தபோது, முகேஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரின் நெற்றியில் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கிறது.
உடனடியாக உதயா இதுகுறித்து அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்க, முகேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி முகேஷ் உயிரிழந்தார்.
இதனையடுத்து, முகேஷ் சுடப்பட்டது குறித்து இருவரை பிடித்து தாழம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விஜய் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நெட் பேங்கிங் சேவை முடங்கியதாக புகார்
“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்
இஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்!
திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..?:சென்னை உயர்நீதிமன்றம்
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
இஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்!
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்
“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்