[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்‌பான அறிவிப்பாணையை ரத்து செய்தது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

''ஒரு கையில் எழுத்தாணி; மறு கையில் ஓலைச்சுவடி'': திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்தவர் யார்?

history-of-thiruvallurvar-painting

பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காவி உடையில் இருப்பது போல திருவள்ளுவர் படம் பதிவிடப்பட்டது. இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் அவமதிக்கப்பட்டது. இப்படி திருவள்ளுவர் விவகாரம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

ஒரு கையில் ஓலைச்சுவடி, மறுகையில் எழுத்தாணி என காட்சி தரும் தெய்வப்புலவரின் படத்தை நாம் பள்ளி, அரசு அலுவலகங்கள் என பல இடங்களிலும் பார்த்திருக்கிறோம். அந்த ஓவியத்தை வரைந்தது யார்? எதன் அடிப்படையில் அந்த ஓவியம் வரையப்பட்டது?

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை 40 ஆண்டுகள் ஆய்வுக்கு பிறகு ஓவியமாக தீட்டியவர் தமிழறிஞரும், ஓவியருமான கேஆர் வேணுகோபால் சர்மா. இந்த தகவலை அவரது மகன் விநாயக்.வே.ஸ்ரீராம்  இந்து தமிழ் திசை நாளிதழுக்கு தெரிவித்துள்ளார். அதில்,

எனது தந்தை வேணுகோபால் சர்மா, திருக்குறள் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும் 40 ஆண்டுகள் ஆய்வு செய்தார். அதன்பின்னர் 1959-ல் திருவள்ளுவர் படத்தை அவர் வரைந்து முடித்தார். அந்த படத்தை யார் பார்த்தாலும், இவர் நம்மவர் என்றே சொல்வார்கள். அந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் 40 ஆண்டுகால முயற்சியில் வரையப்பட்ட படம் அது.

முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், பக்தவத்சலம், அண்ணா, கருணாநிதி, தமிழறிஞர்கள் மு.வரதராசனார், கி.ஆ.பெ.விசுவநாதம், பாரதிதாசன், கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா, கவிஞர் கண்ணதாசன், கிருபானந்த வாரியார் உள்ளிட்டோர் ஏற்றுக் கொண்டு பாராட்டினர். பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்தபோது சட்டப்பேரவையில் அப்பா வரைந்த திருவள்ளுவர் படத்தை அன்றைய குடியரசு துணைத் தலைவர் ஜாகீர் உசேன் திறந்து வைத்தார். தபால் தலையும் வெளியிடப்பட்டது. 

திருவள்ளுவர் படத்தை அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அரசு தொடர்பான அனைத்து இடங்களிலும் வைக்க வேண்டும் என 1967-ல் அண்ணா அரசாணை வெளியிட்டார்’’ என்று தெரிவித்துள்ளார். மேலும் தன் தந்தை புகழ்பெற்ற ஓவியர் மட்டுமல்ல என்றும், தமிழறிஞரும் கூட எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close