[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

“ஏன் இவ்வளவு தாமதமாக வந்தாய்”:முன்னாள் முதல்வரின் கொள்ளு பேரன்- ஸ்விகி ஊழியர்கள் மோதல்..!

swiggy-workers-manhandled-in-chennai

சென்னையில் ஆர்டர் செய்த உணவு காலதாமதமாக வந்ததாக முன்னாள் முதல்வரின் கொள்ளு பேரனுக்கும், "ஸ்விகி" ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வராக இருந்த முனுசாமி நாயுடுவின் கொள்ளு பேரன் பாலாஜி, ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். அசோக் நகர் 7-வது அவென்யூவில் வசித்து வரும் அவர் "ஸ்விகி" செயலியில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ராஜேஷ் கண்ணா என்ற ஊழியர் வீட்டிற்கு உணவு எடுத்து வந்துள்ளார்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஊழியர் ராஜேஷ் தனது தந்தை தனசேகரனை உடன் அழைத்து சென்றுள்ளார். அப்போது இவ்வளவு தாமதமாக ஏன் வந்தாய் என்று கேட்டு பாலாஜி, ஸ்விகி ஊழியர் ராஜேஷ் கண்ணாவை திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷின் தந்தை தனசேகரன் பாலாஜியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

அப்போது பாலாஜி நடத்திவரும் நிறுவனத்தின் மேலாளர் ஜெயராஜ், ராஜேஷ் கண்ணாவை கன்னத்தித்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ராஜேஷ் அருகில் இருந்த டெலிவரி ஊழியர்கள் 3 பேரை வரவழைத்து, பாலாஜியை சரமாரியாக தாக்கி விட்டு சென்றதாக தெரிகிறது. அதனைத்தொடர்ந்து ஸ்விகி ஊழியர்கள் தன்னை தாக்கியதாகவும், 10 சவரன் நகையை பறித்து கொண்டு சென்று விட்டதாகவும் பாலாஜி அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் தாக்குதல் நடந்தது உண்மை என்றும், ஆனால் நகையை பறித்து சென்றதற்கான காட்சி இல்லை என்பதை கண்டறிந்தனர். தாக்குதல் தொடர்பாக ராஜேஷ் அவரது தந்தை தனசேகரன் மற்றும் டெலிவரி ஊழியர்கள் சீனிவாசன், மதியழகன், ஜெயசூர்யா ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் பாலாஜி மீது ராஜேஷ் கண்ணா அளித்த புகார் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : சென்னை
Advertisement:
Advertisement:
[X] Close