[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்‌பான அறிவிப்பாணையை ரத்து செய்தது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

உணவகத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை - அதிரடி சோதனையில் சிக்கிய மதுபாட்டில்கள்

illegal-liquor-in-the-restaurant

சத்தியமங்கலத்தில் உள்ள  உணவகத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 194 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியில் செயல்பட்டு வரும்  உணவகம் ஒன்றில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக கோபி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் ரோந்து சென்ற மதுவிலக்கு போலீசார் உணவகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது உணவக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் 194 மதுபான பாட்டில்கள் இருந்ததை கண்டனர். இதுகுறித்து உணவகம் நடத்தி வரும் சத்தியமங்கலம் திருநகர் காலனியை சேர்ந்த கர்ணன், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த அசோக்குமார் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது உணவகத்தில் மது விற்பனை செய்வதற்காக டாஸ்மாக்கில் மதுபாட்டில்களை வாங்கி வந்ததாக தெரிவித்தனர். 

இதையடுத்து மதுபான பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உணவகத்தில் மது விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இந்நிலையில் உணவகத்தில் மது விற்பனை செய்யும் காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் உணவக ஊழியர் மது கேட்பவர்களுக்கு பாட்டில்களில் மதுவை ஊற்றி கொடுப்பதோடு மது அருந்துவதற்காக பிளாஸ்டிக் டம்ளர்களையும் தரும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close