[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை - பொதுமக்கள் அச்சம்

old-lady-killed-her-home

திருத்துறைப்பூண்டி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மருதவனம் பகுதியை சேர்ந்த விவசாயி எம்.ஜி.ஆர் (எ) ராமச்சந்திரன். இவரது மனைவி ராஜேஸ்வரி (65). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் திருத்துறைப்பூண்டியில் ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். 

இந்த நிலையில் ராஜேஸ்வரி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இன்று மாலை மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து ராஜேஸ்வரியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இது குறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலிசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

இந்த கொலை பணத்திற்காகவா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற கொலை சம்பவங்களால் மாவட்டம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close