சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் ரேணுகா கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பகல் முழுவதும் தூங்கும் ரேணுகா, இரவில் துணி துவைப்பது, சமைப்பது போன்ற வேலைகளை செய்வார். அதேபோல் பகலில் தூங்காமல் நடமாடுபவர்களை கண்டால் தாக்கியுள்ளார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ரேணுகா வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் மீண்டும் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து பாண்டியனும், அவரது உறவினர்களும் ரேணுகாவை பல இடங்களில் தேடியுள்ளனர். இந்நிலையில் விவசாய கிணறு ஒன்றில் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலை அடையாளம் கண்ட பாண்டியன், அது ரேணுகாதான் என உறுதி செய்தார். கிணற்றில் தவறி விழுந்து ரேணுகா உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்