[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

சென்னையில் வெங்காய விலை மீண்டும் உயர்வு

onion-price-soar-in-chennai

சென்னையில் வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கும் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம், கடந்த மாதம் கிலோ 90 ரூபாய் வரை விற்பனையானது. சில நாள்கள் நீடித்த இந்த அதிகப்படியான விலை, பின்னர் படிப்படியாக குறைந்தது. இந்த நிலையில், வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில், சின்ன வெங்காயம் இன்று கிலோ 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம், இன்று 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மழை காரணமாக மத்திய பிரதேசத்தில் இருந்து வரும் வெங்காயம் பெருமளவில் அழுகியதால் விலை உயர்ந்துள்ளது. 

இந்த விலை மேலும் உயர வாய்ப்பிருப்பதாக வணிகர்கள் கூறுகின்றனர். வெங்காயத்தைப் போலவே‌, கடந்த வாரம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட், இன்று 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கத்திரி, அவரை, பீட்ரூட், முள்ளங்கி, வெண்டைக்காய் போன்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close