[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

பெண் காவலரை அடித்து துன்புறுத்தியதாக கணவர் கைது

ex-police-arrested-for-beaten-lady-police

பெண் காவலரை அடித்து அவமானப் படுத்தியதாக ஓய்வு பெற்ற காவலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் உமாமகேஸ்வரி(37). இவர் 2006ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்து தற்போது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் டில்லிபாபு(38), 2003ம் ஆண்டு காவல்துறையில் காவலராக சேர்ந்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் சரிவர பணிக்கு வராததால் காவல்துறை சார்பில் அவருக்கு விருப்ப ஓய்வு கொடுத்து பணியில் இருந்து நீக்கி விட்டனர்.

இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், டில்லிபாபு வேறு ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டு உமாமகேஸ்வரியை தொடர்ந்து அடித்து துன்புறுத்தியும், அவமானப்படுத்தியும் வந்ததாக தெரிகிறது. இதையடுத்து உமாமகேஸ்வரி பரங்கிமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். 

புகாரின் பேரில் டில்லிபாபு மற்றும் அவருடன் உறவில் இருந்த ஸ்ரீதேவி ஆகியோர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டில்லிபாபுவை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஸ்ரீதேவியை தேடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close