[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

மாமியார்-மருமகள் தகராறு: பெற்ற அம்மாவை கொடூரமாகக் கொன்ற மகன்

son-killed-his-mother-at-trichy

திருச்சி அருகே அம்மாவை, பெற்ற மகனே கொடூரமாகக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கணேசபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் மனைவி பாப்பாத்தி. இவர்கள்  மகன் பிரகாஷ் (30). திருச்சி மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார் ஆறுமுகம். பிரகாஷ், படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருந்தார். இவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு வெண்ணிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் பிரகாஷின் அம்மாவுக்கும் மனைவி வெண்ணிலாவிற்கும் அடிக்கடி தகராறு எழுந்துள்ளது. மாமியார்- மருமகள் சண்டையால் கடுப்பான பிரகாஷ், தனது மனைவியை, அவரது சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்தில் விட்டுவிட்டு வந்துள்ளார்.

நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு வீட்டுக்குத் திரும்பிய பிரகாஷ், தனது அம்மாவிடம் இனி மருமகளால் தொல்லை இல்லை, அவளை வீட்டில் விட்டுட்டு வந்துவிட்டேன் என கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு எழுந்துள்ளது. 

ஆத்திரமடைந்த பிரகாஷ் அங்கிருந்த இரும்பு கம்பியால், தனது அம்மாவைத் தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகனைத் தடுக்க வந்த அப்பா ஆறுமுகத்தையும் பிரகாஷ் தாக்கியுள்ளார். இதில் அவர் படுகாயமடைந்தார்.
 
இதுகுறித்து திருச்சி பொன்மலை காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாப்பாத்தியின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த ஆறுமுகமும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமியார்- மருமகள் தகராறு காரணமாக, பெற்ற அம்மாவையே மகன் அடித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close