[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது
  • BREAKING-NEWS 2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை

அலட்சியத்தால் அடுத்தடுத்து பறிபோன 4 பிஞ்சு குழந்தைகளின் உயிர்கள்..!

4-children-died-in-tn-recently-due-to-their-parent-s-negligence

குழந்தை சுஜித் உயிரிழந்ததால் ஏற்பட்ட சோகம் மறைவதற்குள் பெற்றோர் மற்றும் உறவினர்களின் அலட்சியம் காரணமாக அடுத்தடுத்து 4 பிஞ்சு குழந்தைகளின் உயிர் பறிபோயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளியில் என்ன நடக்கிறது என தெரியாமல் தொலைக்காட்சியை தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தனர் தூத்துக்குடி திரேஸ்புரம் லிங்கேஸ்வரன் - நிஷா தம்பதியினர். டிவியில் முழு கவனமும் இருந்ததால் தங்களது குழந்தை என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் கவனிக்கத் தவறினர். அதன் விளைவு அவர்களது 2 வயது குழந்தை ரேவதி சஞ்சனா, வீட்டின் குளியறையில் இருந்த கேனில் இருந்த தண்ணீரை எடுக்க முயற்சித்த போது தலைக்குப்புற அதற்குள் கவிழ்ந்து மூச்சுத் திணறி உயிரிழந்தது.

அதேபோன்ற சம்பவம் கடலூர் மாவட்டம் பண்டரகோட்டை என்ற ஊரிலும் நிகழ்ந்தது. அந்த ஊரைச் சேர்ந்த மகாராஜன் - பிரியா தம்பதியின் 3 வயது மகள் பவழவேணி. பிரியாவின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், குழந்தையை அருகிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு மருத்துவமனைக்குச் சென்றனர். அப்போது பவழவேணி வீட்டின் அருகே கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாள். இது எதுவுமே அக்குழந்தையின் உறவினர்களுக்கு நீண்ட நேரத்திற்கு தெரியவில்லை.

இவைதவிர, திண்டுக்கல் மாவட்டம் பொன்மாந்துறை புதுப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் 2 வயது குழந்தை பிரசாந்த்தும் இவ்வாறே உயிரிழந்தான். உறவினர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அந்தக்குழந்தை, மூடப்படாத தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.இந்த சம்பவங்களால் ஏற்பட்ட சோகச்சுவடு மறைவதற்குள் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் மற்றொரு துயரச் சம்பவம் நிகழ்ந்தது. வீராங்குப்பத்தைச் ‌சேர்ந்த செல்வபாண்டியன் - ரம்யா தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள். வேலைக்குச் சென்ற பெற்றோர் தங்களது இரு மகள்களை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கடைசிக் குழந்தையான 4 வயது நிரம்பிய யுவந்திகாவை பாட்டியின் பொறுப்பில் விட்டுவிட்டுச் சென்றனர்.

அந்த மூதாட்டி துணிகளை துவைத்துக் கொண்டிருந்தபோது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த யுவந்திகா, நாற்காலியில் ஏறி, 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேனை எட்டிப்பார்த்தபோது அதற்குள் விழுந்துவிட்டாள். துணி துவைத்து முடித்துவிட்டு குழந்தையை பாட்டி விஜயா தேடியபோது, கேனில் உயிரிழந்த நிலையில், குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

குழந்தைகளை கவ‌‌னித்துக் கொள்ளும் பொறுப்பை பிறரிடம் ஒப்படைப்பது, கவனக்குறைவு மற்றும் கண்காணிக்கத் தவறுவது போன்ற காரணங்களால் இந்த நான்கு குழந்தைகளும் உயிரிழக்க நேரிட்டுள்ளது. இந்த உயிர்பலிகள் அனைத்தும் சுஜித்தின் மரணத்திற்குப் பிறகுதான் நிகழ்ந்துள்ளன என்பதுதான் கூடுதல் அதிர்ச்சி அளிக்கும் விசயங்களாகும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close