[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்‌பான அறிவிப்பாணையை ரத்து செய்தது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

இன்றைய முக்கியச் செய்திகள் !

top-headlines-today

3 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று தாய்லாந்து செல்கிறார். அங்கு தாய்லாந்து மொழியில் எழுதப்பட்ட திருக்குறள் புத்தகத்தை பாங்காக்கில் பிரதமர் வெளியிடுகிறார்.

தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் வகையில் 12 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பில் கீழடியில் அருங்காங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு நாள் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

பயனர்களின் பதிவுகள் உளவு பார்க்கப்படும் தகவலை மத்திய அரசிடம் கடந்த மே மாதமே தெரிவித்துவிட்டோம், தகவலை மறைத்ததாக மத்திய அரசு குற்றஞ்சாட்டிய நிலையில் வாட்சப் விளக்கம்.

திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம். இதனால் அங்கு பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

பிகில் பட வெளியீட்டின் போது ரகளையில் ஈடுபட்டதாக மேலும் 18 விஜய் ரசிகர்கள் கைது செய்யப்படுள்ளனர். ஏற்கெனவே 32 பேர் கைதான நிலையில், கைதானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு.

டெல்லியில் காற்று மாசு அபாய அளவை தாண்டிய நிலையில் பொது சுகாதார அவசர நிலை அங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்குச் சுவாச பிரச்னைகளுடன் மருத்துவமனைகளில் மக்கள் குவிந்துள்ளனர். சிறுவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் ஃபோன்களின் அழைப்பு ஒலிக்கும் நேரம் 30 நொடிகளாக நிர்ணயத்து தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலகக் கோரி வலுக்கிறது போராட்டம். இனியும் நீடித்தால் நாட்டையே இல்லாமல் செய்து விடுவார் என போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close