திருப்பூரில் போலி மருத்துவர் அபூர்வ மூலிகை எனக் கூறி கொடுத்த ஆசிட்டால் சிறுமி ஒருவர் கடும் பாதிப்புக்குள்ளானர்.
திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் நூல் கடை நடத்தி வருபவர் தனபால். இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியருக்கு இரு மகள்கள் உள்ளனர். இதில் இரண்டாவது பெண் ஒன்பதாவது படிக்கும் 13 வயது சிறுமி. இந்த சிறுமிக்கு தோல் நோய் பாதிப்பு இருந்துள்ளது. நீண்ட நாட்கள் மருத்துவம் பார்த்தும் சரியாகாத காரணத்தால், தெரிந்தவர்கள் மூலம் பொள்ளாச்சியை சேர்ந்த பரம்பரை வைத்தியர் மருகு மகேந்திரனை தொடர்பு கொண்டுள்ளார்.
அடுத்தநாள் தனபால் வீட்டுக்கு வந்த வைத்தியர் மருகு மகேந்திரன், சிறுமியின் பெற்றோரிடம் தான் பரம்பரையாக வைத்தியம் பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் சிறுமியின் தோல்நோய் பாதிப்பிற்கு கொல்லிமலையிலிருந்து வைரம் போன்ற அரிதான மூலிகை மருந்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்த மருந்தை சிறுமி மீது தடவியதாக தெரிகிறது. இதனை நம்பிய பெற்றோர் ஐந்தாயிரம் பணத்தை கொடுத்துள்ளனர். அடுத்த சில நாட்களிலேயே சிறுமிக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். பயந்து போன சிறுமியின் பெற்றோர் முறையான மருத்துவரிடம் காட்ட, சிறுமி மீது தடவப்பட்டது அபூர்வ மூலிகை மருந்தல்ல, டைல்ஸ் கற்களுக்கு ஊற்றப்படும் ‘ரெட் ஆசிட்’ மருந்து என தெரியவந்தது.
இதனால், சிறுமியின் தோல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சரி செய்ய இயலாது எனவும் மருத்துவர் தெரிவித்தாக சிறுமியின் பெற்றோர் கூறினர். இதுதொடர்பாக போலி மருத்துவர் மருகு மகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வேலம்பாளையம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலம் இல்லாத பரிதாபம் - 30 ஆண்டுகளாக அச்சத்துடன் படகில் செல்லும் மக்கள்
“நித்யானந்தா அழைத்தால் ‘கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி
28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்
பழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு
குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!