அனுமதி இல்லாத நேரங்களில் பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் சுமார் 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டாசு புகையால் காற்றில் அதிக அளவு மாசு கலப்பதை தடுக்கும் வகையில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி தீபாவளியன்று காலை மற்றும் மாலையில் 6 மணி முதல் 7 மணி வரை, 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அனுமதி அளித்த நேரத்தை தவிர மற்ற நேரங்களிலும் பொதுமக்கள் பட்டாசு வெடித்தனர். இதுதொடர்பாக புகார் எழுந்ததையடுத்து, சென்னையில் 179 பேர் உட்பட 497 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 6 மாத சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
“குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” - 5 மாநில அரசுகள் போர்க்கொடி
50 நாட்களை நிறைவு செய்த ‘பிகில்’, ’கைதி’ - ரசிகர்களுக்கு இயக்குநர் நன்றி
சாய்ந்த 50 ஆண்டுகள் பழமையான மரம் - மீண்டும் அழகாக நட்டு வைத்த அதிகாரிகள்
பாலியல் வன்கொடுமைக்கு 21 நாட்களுக்குள் தூக்கு - ஆந்திர பேரவையில் நிறைவேறியது திஷா மசோதா
அசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு?