சிறுவன் சுர்ஜித்தை பத்திரமாக மீட்க தானும் பிரார்த்தனை செய்வதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 46 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நாடே தீபாவளி பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, தமிழ்நாட்டில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தச் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோர்களுடன் சேர்க்கப்பட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
மொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்..! - அசத்திய பள்ளி மாணவி
என்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..?
“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்
“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்
“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்
பின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு!
மரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்? - போலீசார் விசாரணை
மின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..!
கைலாசம் தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன? - அஸ்வின் கிண்டல்