[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

’அஜாக்கிரதை, அலட்சியம் தொடர் பண்புகள் ஆகிவிட்டன: நடிகர் விவேக் சாடல்!

actor-vivek-pray-for-child-surjith-which-fell-into-abandoned-borewell

’குழந்தை சுர்ஜித் மீண்டு வரவேண்டும்; நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே’ என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகிலுள்ள நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுர்ஜித் வில்சன். வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சுர்ஜித், அங்கிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். அவனை மீட்கும் பணி 15 மணி நேரமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்ட நிலையில், மழைப்பொழிவால் தற்போது மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் மருத்துவ குழு மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளன. ஆழ்துறை கிணற்றுக்குள் மண் சரிந்துள்ளதால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், ‘#PrayforSurjith’, ‘#SaveSujith’ உள்ளிட்ட ஹேஸ்டேக்குகளில் பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நடிகர் விவேக், ’சுர்ஜித் மீண்டு வரவேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே. அஜாக்ரதை, அலட்சியம் இவை இந்த பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன. இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு’ என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close