[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்‌பான அறிவிப்பாணையை ரத்து செய்தது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

மருத்துவர்கள் வேலைநிறுத்தம் : பேச்சுவார்த்தை தோல்வி

doctors-protest-will-be-continue

மருத்துவர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. 

ஊதிய உயர்வு உளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், இதுவரை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷுடன் அரசு மருத்துவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதனால் போராட்டம் தொடரும் என அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close