[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது
  • BREAKING-NEWS 2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை

காலை வாரிவிட்டு திருடனை மடக்கிப் பிடித்த பெண் - போலீஸ் பாராட்டு 

dindigul-district-news

வத்தலகுண்டு அருகே திருடனை தைரியமாக பிடித்த பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.   

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கரட்டுபட்டியை சேர்ந்தவர் மணி. இவர் நேற்று முன்தினம் இரவு உறங்கிக் கொண்டிருந்தபோது வளர்ப்பு நாய் சத்தமிடவே என்னவென்று பார்க்க வெளியே சென்றுள்ளார். வெளியே சென்ற கணவன் நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவருடைய மனைவி வசந்தி வீட்டுக்கு வெளியே சென்று பார்த்துள்ளார்.

அப்போது மர்ம நபர்கள் இரண்டு பேர் தெருவில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த நபர்களில் ஒருவன் வேகமாக ஓடி வந்து வசந்தியின் கழுத்திலிருந்த சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றார். உடனே சுதாரித்த வசந்தி கொள்ளையனின் காலை வாரிவிட்டு அவனை ஓடவிடாமல் மடக்கிப் பிடித்தார். 

திருடன் கையிலிருந்த ஆயுதத்தை காட்டிய போதும் வசந்தி அந்தத் திருடனை விடவில்லை. உடனே அவர் கூச்சலிட்டுக் கத்தியதால் அந்தக் கிராம மக்கள் ஒன்று திரண்டனர். திருடனை மடக்கிப் பிடித்தனர். அதன்பின் பிடிபட்ட கொள்ளையனை விருவீடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

விசாரணையில் பிடிபட்ட கொள்ளையன் கமுதி பகுதியை சேர்ந்த சண்முகம் என தெரியவந்தது. இவர் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. திருடனிடம் இருந்து 50 பவுன் தங்க நகைகளை விருவீடு போலீசார் கைப்பற்றி சண்முகத்தை கைது செய்தனர். திருடனை தைரியமாகப் போராடி பிடித்த கரட்டுப்பட்டி வசந்தியை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close