[X] Close
JUST IN

பள்ளி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை - ஒருவர் கைது

a-man-arrested-for-sales-ganja-to-students-in-salem

சேலத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார். 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி சுற்றுவட்டார பகுதியில் பல பள்ளி, கல்லூரிகள் உள்ளன. இங்கு பயிலும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் எம்.காளிபட்டி ஏரியூரில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த செல்வம் என்கின்ற சுரட்டையனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதே ஊரை சேர்ந்த பூங்கொடி மற்றும் அவரது மகன் சதீஷ் குமார் ஆகியோரிடம் கஞ்சா வாங்கியதாகவும், அவர்களுக்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா வருவதும் தெரியவந்தது. அதன்படி, பூங்கொடி மற்றும் அவரது மகன் இருவரையும் கைது செய்வதற்காக, அவர்களது வீட்டுக்கு போலீசார் சென்றனர். ஆனால் அதற்குள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இருவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close