[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
  • BREAKING-NEWS விருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது
  • BREAKING-NEWS சிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது
  • BREAKING-NEWS தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

இனி ‘நோ’ பேனர் - அரசு மருத்துவமனைக்கு உதவிய விஜய் ரசிகர்கள் 

vijay-fans-helped-for-hospital-in-tenkasi

‘பிகில்’ படம் வெளியாவதை முன்னிட்டு பேனர் கட்டவுட்டுக்கு பதில் அரசு மருத்துவமனைக்கு ஸ்ட்ரெச்சர் மற்றும் இரத்த அழுத்த சோதனை கருவிகளை விஜய் ரசிகர்கள் வழங்கியுள்ளனர்.

சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அரசியல் தலைவர்கள், நடிகர்கள் பலரும் தங்களின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை பேனர் வைக்க வேண்டாம் என வலியுறுத்தினர். 

Image result for bigil vijay audio speech

‘பிகில்’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசும்போது, ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மேலும் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் பேனர் வைக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பிகில் படம் வரும் 25-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். 

சில நாட்களுக்கு முன்பு நெல்லை விஜய் ரசிகர்கள் மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 சிசிடிவி கேமராக்கள் மற்றும் மானிட்டர்களை அமைத்து கொடுத்தனர். இது அனைவரின் பாராட்டையும் பெற்றது.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் தென்காசியில் அரசு மருத்துவமனைக்கு ஒரு ஸ்ட்ரெச்சர் மற்றும் இரண்டு இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை விஜய் ரசிகர்கள் வழங்கியுள்ளனர். தென்காசி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தென்காசி காவல் ஆய்வாளர் ஆடிவேல் மற்றும் மருத்துவமணை மருத்துவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close