[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

மகள் திருமணத்திற்கு பத்து நாட்கள் முன்பு தந்தை சடலமாக மீட்பு

one-old-man-murdered-in-tirupattur

மகள் திருமணத்திற்கு பத்து நாட்களே உள்ள நிலையில் எரிந்த நிலையில் தந்தையின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலைப் பகுதி புலியனூர் காப்பு காட்டில் கீழ் மத்தூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி  சரவணன்  (50). இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவியும் மூன்று பெண்பிள்ளைகள் உள்ளனர். இவரது மூத்த மகளின் திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் நேற்று சரவணன் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு காலை 6 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் ஜவ்வாது மலை அடிவார புலியனூர் காப்புக் காட்டில் தனியாக இருசக்கர வாகனம் ஒன்று கிடந்ததை அப்பகுதியில் ஆடு மேய்ப்பவர்கள் பார்த்துவிட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்தத் தகவலின் பேரில் வன அலுவலர் அண்ணாமலை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது ஒரு இருசக்கர வாகனத்தின் அருகே சுமார் 50 அடி தொலைவில் கருகிய நிலையில் ஆண் சடலம் இருந்துள்ளது.

பின்னர் இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில், பெட்ரோல் பைப்பு பிடிங்கி கொண்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளது. வண்டியின் கவரில் செல்போன் ஒன்றும் இருந்துள்ளது. அந்த செல்போனில் அவர் கடைசியாக எந்த நம்பருக்கு தொடர்பு கொண்டுள்ளார் என விசாரித்துள்ளனர். விசாரணையி அவர் ஊத்தங்கரை தாலுக்கா கீழ் மத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது.

பின்னர் திருப்பத்தூர் கிராம காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் உதவிக் காவல் ஆய்வாளர் மஞ்சுநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் கொலையா தற்கொலையா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close