[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை 

nanguneri-and-vikravandi-by-election-results-will-be-announced-tomorrow

நாங்குநேரி, விக்கிரவாண்டி உள்ளிட்ட இடைத்தேர்தல் மற்றும் மகாராஷ்ட்ரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன.

மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி நடந்து முடிந்த தேர்தலில் மகாராஷ்ட்ராவில் 61.13 சதவிகிதமும், ஹரியானா தேர்தலில் 65.75 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகின. 

இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரியின் காமராஜ் நகர் உள்ளிட்ட நாடு முழுவதும் 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து தேர்தல்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close