[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

“தோனியின் எதிர்காலம் குறித்த கேள்வி” - சிரித்துவிட்டு பதிலளித்த கோலி

why-virat-kohli-laughed-when-asked-about-sourav-ganguly-seeking-clarity-on-ms-dhoni-s-future

பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்கவுள்ள சவுரவ் கங்குலி தோனியின் எதிர்காலம் குறித்து தெளிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தினாரா ? என கேட்கப்பட்ட கேள்விக்கு விராட் கோலி சிரித்துக் கொண்டே பதிலளித்தார்..

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என வென்ற மகிழ்ச்சியில் இந்திய கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், ‘பிசிசிஐ தலைவராக கங்குலி உங்களை சந்தித்ததாகவும், தோனியின் எதிர்காலம் குறித்து தெளிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டதாகவும்’ கூறப்படுகிறதே என்று கேட்டனர். 

இந்த கேள்விக்கு சிரிப்பை முதலில் பதிலாக கொடுத்த கோலி, பின்னர், “நான் கங்குலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் பிசிசிஐ தலைவராக வந்திருப்பது பெருமைக்குரியது. ஆனால் அவர் தோனி தொடர்பாக இன்னும் என்னிடம் பேசவில்லை. அதுதொடர்பாக அவர் பேச நினைக்கும்போது என்னை தொடர்பு கொள்வார்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கோலி, “அப்படி கேட்டும் போது என்ன கூறவேண்டும் என்பதில், நான் உறுதியாக இருக்கிறேன். அந்த நேரத்தில் நான் அவரை நேரில் சந்தித்து பேசுவேன். அவ்வளவு தான்” என்றார். இதைத்தொடர்ந்து அடுத்த கேள்வியை எழுப்பிய செய்தியாளர்கள், “தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்றுள்ள நிலையில், தோனியை சென்று சந்திப்பீர்களா” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கோலி, “இல்லை. அவர் இங்கே தான் இருக்கிறேன். உடைமாற்று அறையில் தான் அவர் இருக்கிறார். வந்து ஹலோ சொல்லுங்கள்” என்று கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close