[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

தொடர் மழை எதிரொலி: வேகமாக நிரம்பும் குமரி மாவட்ட அணைகள்!

dams-and-water-resources-filling-up-fast-in-kanyakumari

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழையுடன் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குமரி, தூத்துக்குடி, நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடுமையான மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

(கோப்புப்படம்)

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து அணைகளுக்கு தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

நாகர்கோவில் நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணை நிரம்பி தனது முழு கொள்ளளவான 25 அடியை எட்டியுள்ளது. அணையின் முழு கொள்ளளவும் நிரம்பி உள்ளதாலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் அணையில் இருந்து வினாடிக்கு 7.42 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீரானது நாகர்கோவிலில் அமைந்துள்ள தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

முக்கடல் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் வரும் 2020 ஆண்டில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகத்திற்கு தட்டுப்பாடு இருக்காது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close