[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச
  • BREAKING-NEWS டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்
  • BREAKING-NEWS கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு
  • BREAKING-NEWS உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே

‘போலி நகையை அடகுவைத்து 2.15 லட்சம் கடன்’ - தனியார் வங்கியில் கைவரிசை

fake-jewellery-for-bank-loan-in-kanjipuram

போலி தங்க நகையை அடமானம் வைத்து வங்கியை ஏமாற்றிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரவி என்பவர் சென்னை சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் ஐடிபிஐ வங்கியில் கடந்த வருடம் 122 கிராம் தங்க வளையலை அடமானம் வைத்துள்ளார். நகையை சோதனை செய்த பின்னரே 2.15 லட்ச ரூபாயை வங்கி அதிகாரிகள் கொடுத்துள்ளனர்.

Image result for நகை

நகையை அடமானம் வைத்து பணத்தை பெற்றுச் சென்ற ரவி வட்டியும் செலுத்தவில்லை, நகையையும் மீட்கவில்லை எனத் தெரிகிறது. நகைக்கு வட்டி செலுத்தாததால் முறைப்படி வங்கியில் இருந்து நோட்டிசும் அனுப்பப்பட்டது. ரவி தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால் நகையை பொது ஏலத்தில் விட வங்கி நிர்வாகம் முடிவு செய்தது. 

அப்போது நகையை சோதித்த வங்கி அதிகாரிகள் நகை போலியானது எனக் கண்டறிந்தனர். அதிர்ச்சியடைந்த வங்கி நிர்வாகிகள் இதுகுறித்து மேலாளரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து வங்கி மேலாளர் அன்பழகன் அளித்த புகாரின் பேரில் செம்மஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலி நகை அடமான விவகாரத்தில் வங்கி ஊழியர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close