[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி
  • BREAKING-NEWS இடஒதுக்கீடு விவரங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடரில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டத்தை உருவாக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை

‘10 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்’ - சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதிமன்றம் தண்டனை

madras-hc-directs-a-govt-law-college-student-to-plant-10-saplings-on-college-campus

கல்லூரி வளாகத்தில் 10 மரக் கன்றுகளை நட்டு பராமரிக்க சட்டக் கல்லூரி மாணவர் ஒருவருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பச்சையப்பன் கல்லூரி "ஓப்பனிங் டே" அன்று பேருந்தில் மீது ஏறி கூச்சல் எழுப்பி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மாணவர்கள் மீது அயனாவரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.

Image result for law student

அதில் புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் படிக்கும் துரைராஜ் மீது வழக்குப் பதியப்பட்டது. அந்த வழக்கு எம்.எஸ்.ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டக் கல்லூரி மாணவரான தன்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர் என நினைத்து வழக்குப் பதிவு செய்துள்ளார்கள் என கூறிய மாணவர் துரைராஜ் தன்னுடைய கல்லூரி அடையாள அட்டையையும் காண்பித்தார்.

Image result for sapling

வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், “துரைராஜ் சம்பவ இடத்தில் இருந்திருக்கிறார் என்றாலும், அவரது எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது. கல்லூரியில் 10 மரக்கன்றுகளை நட்டு, ஒரு மாதத்திற்கு தண்ணீர் ஊற்றி அவற்றை பராமரிக்க வேண்டும். தான் பராமரிக்கும் மரக் கன்றுகளின் விவரங்களை கல்லூரி முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். மேலும் துரைராஜ் மீதான வழக்கை ரத்து செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close