[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன
  • BREAKING-NEWS ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS கேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்
  • BREAKING-NEWS கோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்
  • BREAKING-NEWS கனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு

சென்னையில் பசுவின் வயிற்றில் இருந்த 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்!

tamil-nadu-veterinary-university-surgeons-remove-52-kg-of-plastic-from-cow-in-chennai

சென்னையில் பசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அறுவை சிகிச்சை மூலம் கால்நடை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

சென்னை திருமுல்லைவாயிலைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவருக்குச் சொந்தமான பசு, சாணம் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளது. இதனையடுத்து பசுவை அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு முனிரத்தினம் கொண்டு சென்றுள்ளார். பசுவை பரிசோதித்த மருத்துவர்கள், வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து பசுவை வேப்பேரிக்கு கொண்டு சென்றுள்ளார் முனிரத்தினம். அங்கு பசுவை ஸ்கேன் செய்த மருத்துவர்கள், அதன் வயிற்றில் கழிவுப்பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். 

இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்ய தீர்மானித்த மருத்துவர்கள், சுமார் ஐந்தரை மணிநேரம் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர். பின்னர் பசுவின் வயிற்றில் இருந்து  52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பசுவின் இரைப்பையில் தொடர்ந்து பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் தங்கி இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வனங்கள் அழிப்பு, நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, நில ஆக்கிரமிப்பு, நெகிழி பொருட்கள் பயன்பாடு, புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால், மிகச்சிறிய தாவரங்கள் முதல் கடல் வாழ் உயிரினமான மிகப்பெரிய திமிங்கலம் வரை பேராபத்தை சந்தித்து வருகின்றன. மனிதர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக், நிலத்துக்கும், நீருக்கும், அனைத்து உயிரினங்களுக்குமே எதிரியாக உள்ளது.

 

அந்த பெரும் ஆபத்தான பிளாஸ்டிக்கை ஒழிக்க உலக நாடுகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் ஒரு மாட்டின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசுவின் உணவு என்பது புல், மரத்தழைகள் தான். ஆனால் அந்த நிலை முற்றிலும் மாறி பசுவின் வயிற்றில் இருந்து பிளாஸ்டிக் கிலோ கணக்கில் அகற்றப்பட்டிருப்பது பேராபத்தின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close