[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

7 பேர் விடுதலையில் ஆளுநரின் நிலை ? - முதல்வர் விளக்கமளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

mk-stalin-request-to-cm-palaniswamy-for-give-clarity-in-7-person-release-stand

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பான தீர்மானத்தை ஆளுநர் ஏற்கவில்லை என்ற தகவல் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கமளிக்க திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ராஜீவ்‌ காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆளுநர் ‌பன்வாரிலால் புரோகித் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அதிகாரபூர்வமற்ற முறையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும் எழுத்துப்பூர்வமாக ஆளுநர், தமிழக அரசுக்கு எதையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என தமிழக ஆளுநர், முதலமைச்சரிடம் தெரிவித்து விட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து முதல்வர் அவர்கள், தமிழக மக்களுக்கு உடனே விளக்கம் தந்திட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close