மாமல்லபுரத்தல் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த கனமழையினால், ஸ்தல சயன பெருமாள் கோயிலின் கங்கைகொண்டான் மண்டபத்தின் ஒருபகுதி காலை இடிந்து விழுந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், மாமல்லபுரத்தில் நேற்றுமுன்தினம் இரவு முதல் அதிகாலை வரையில் மழை கொட்டித் தீர்த்தது.
இந்நிலையில், பேரூராட்சி அலுவலகம் அருகே ஸ்தல சயன பெருமாள் கோயிலுக்கு சொந்தமான பல நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் கங்கை கொண்டான் மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. இது முறையான பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில், நள்ளிரவில் பெய்த கனமழையின் போது மண்டபத்தின் மேற்கூரையின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. மேலும், மண்டபத்தின் தூண்கள் உள்வாங்கின. இதனால், மண்டபம் முழுவதும் எப்போதும் வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. தகவல் அறிந்த பேரூராட்சி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் மண்டபத்தை ஆய்வு செய்தனர். மேலும், மண்டபத்தை பாதுகாப்பாக அகற்றி புதிதாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அறநிலையத்துறை அதிகாரி கூறியதாவது " மழையினால் இடிந்துள்ள கங்கைகொண்டான் மண்படம் மிகவும் பழமையானது. இந்த மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என ஏற்கெனவே அறநிலையத்துறை சார்பில், புராதான கோயில்களை சீரமைப்பதற்கான நீதிமன்ற கமிட்டியில் தெரிவித்து அனுமதி பெறப்பட்டுள்ளது. அதனால், மண்டபத்தை பாதுகாப்பாக அகற்றி விரைவில் புதிய மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
2008-லேயே ஆசிட் வீச்சுக்கு ‘என்கவுன்ட்டர்’ - சைபராபாத் ஆணையரின் பின்னணி..!
தெலங்கானா : 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி ?
தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
“வேட்பு மனுக்களை பெற வேண்டாம்”- ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு