[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை

தாயை சாலையில் விட்டுச்சென்ற மகன்: உணவு நீரின்றி தவித்த மூதாட்டி

son-left-his-mother-on-road-side-due-to-poverty

முதுமையில் நோய்வாய்ப்பட்ட தாயை மகனே தெருவில் விட்டுச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி அறிந்து செய்தியாளர்கள் மேற்கொண்ட முயற்சியால் அந்த மூதாட்டி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களா தெருவில் கடந்த ஒருவாரமாக வெயிலிலும், மழையிலுமாக மூதாட்டி ஒருவர் ஒடுங்கிக்கிடந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக உணவும், தண்ணீரும் அருந்தாமல் மூதாட்டி சாலை ஓரத்திலேயே கிடந்திருக்கிறார்.

மூதாட்டியின் பரிதாப நிலை குறித்து அப்பகுதி மக்கள் கோவில்பட்டி செய்தியாளர்களுக்கு தகவல் அளித்தனர். சாலையோரம் போர்த்திக் கொள்ளக்கூட ஆடையின்றி பரிதாப நிலையில் இருந்த மூதாட்டிக்கு ஆடை கிடைக்க முயற்சித்த செய்தியாளர்கள், அவரிடம் விசாரித்தபோது, அவரது மகனே, வீதியில் கொண்டு வந்து விட்டு வெளியே அனுப்பிவிட்டதாக தெரிவித்தார்

இதனையடுத்து கோட்டாட்சியருக்கு செய்தியாளர்கள் தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய் ஆய்வாளர் மோகன் மற்றும் வருவாய்த்துறையினர் மூதாட்டியின் மகனிடம் விசாரித்தனர். வறுமை காரணமாகவும், தானும், தனது மனைவியும் கூலி வேலைக்கு செல்வதாலும் அம்மாவை பராமரிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

பின்னர் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, மூதாட்டி சண்முகத்தாயை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும் மூதாட்டியை பாண்டவர்மங்கலத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close