[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தோனேசியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம். 7.4 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

‘ராஜீவ் கொலை வழக்கு ரவிச்சந்திரன் பரோல் மனு’ - 3 வாரத்தில் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

rajiv-murder-case-ravichandran-petition-high-court-order-consult

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத சாதாரண விடுப்பு கோரிய மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.

விருதுநகர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எனது மகன் ரவிச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எனது மகன் இதுவரை நான்கு முறை மட்டுமே விடுப்பில் வந்துள்ளார். 7 ஆண்டுகள், 10 ஆண்டுகள் மற்றும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்கள் முன்கூட்டியே விடுவிக்கப்படும் நிலையில், அரசியல் பிரச்னை காரணமாக எனது மகன் உள்ளிட்டோர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் என 2018ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான விவகாரம் ஆளுநரின் முடிவுக்காக தற்போது வரை காத்திருப்பில் உள்ளது. ரவிச்சந்திரனுக்கு நீண்ட நாள் பரோல் கோரி 2018 டிசம்பரில் வழக்கு தொடர்ந்த போது, நீண்டகால பரோல் வழங்குவது சாத்தியம் இல்லை. ஆகவே புதிதாக மனுத்தாக்கல் செய்தால், ஒரு மாதம் பரோல் வழங்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றமும் புதிதாக மனுத் தாக்கல் செய்ய அனுமதி வழங்கியிருந்தது.

 

அதனடிப்படையில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி எனது மகன் ரவிச்சந்திரனுக்கு ஒரு மாதம் சாதாரண விடுப்பு வழங்க கோரி மனு அளித்தும் இதுவரை பரிசீலிக்கவில்லை. ஆகவே, எனது மகன் ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத கால சாதாரண விடுமுறை வழங்க உத்தரவிடவேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, ரவிச்சந்திரனின் பரோல் மனுவை 3 வாரத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க உள்துறையின் சிறைத்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close