[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

நிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கிய முதியவர் - பரிதாப உயிரிழப்பு

old-man-slipped-from-bike-and-fall-under-bus-tire-and-die-in-chennai

சென்னை வடபழனியில் மாநகரப்பேருந்தை முந்திச்செல்ல முயன்ற போது சக்கரத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் இன்று மதியம் வடபழனியில் இருந்து, அசோக் நகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வடபழனி பாலத்தின் கீழ் மாநகரப்பேருந்தை முந்தி செல்ல மகேந்திரன் முயன்றார். குறுகி‌‌ய சாலை என்பதால், பேருந்தை முந்தி செல்ல முடியாமல் திடீரென பிரேக் பிடித்த மகேந்திரன், நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். 

இதில், மாநகரப்பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் கருப்பையா, நடத்துநர் ஸ்டாலின் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close