[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

கனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..!

chennai-hc-allow-to-withdraw-tamilisai-petition

தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனிடையே கனிமொழியின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, உயர்நீதிமன்றத்தில் தமிழிசை வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில்,  ’சிங்கப்பூர் பிரஜையான கனிமொழியின் கணவர் அரவிந்தனின் வருமானத்தைப் பற்றி வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை, அதை மறைத்தது தவறு. வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது, கனிமொழியின் வேட்புமனு குறித்து எனது தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதைத் தேர்தல் அதிகாரி ஏற்கவில்லை. இதனால் கனிமொழியின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கனிமொழிக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதனிடையே தெலங்கானா ஆளுநராக தமிழிசை பதவியேற்றார். இதனையடுத்து தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தெலங்கானா ஆளுநராக பதவியேற்றுள்ளதால் வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என தமிழிசை தரப்பில் கூறப்பட்டது. வழக்கை தொடர்ந்து நடத்துவதா அல்லது வேண்டாமா என்பது பற்றி அக்டோபர் 14-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close