[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து

இன்றைய முக்கியச் செய்திகள்..!

today-headine-news-october-14

அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு. உச்சநீதிமன்றத்தில் இன்று இறுதிக்கட்ட விசாரணை தொடங்கும் நிலையில் நடவடிக்கை.

ஊழலின் ஊற்றுக்கண்ணே திமுகதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாங்குநேரி பரப்புரையில் குற்றச்சாட்டு. சீன அதிபருக்கு தான் கை கொடுத்ததை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் விமர்சனம்.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையில் முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்.

ராஜீவ் கொலையை நியாப்படுத்தும் வகையில் சீமான் சர்ச்சை பேச்சு. தேசத்துரோக வழக்கில் கைது செய்யுமாறு காங்கிரஸ் வலியுறுத்தல்.

வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்குவோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தர முடியுமா..? மகாராஷ்டிரா தேர்தல் பரப்புரையில் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி சவால்.

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது. கைதான திருவாரூர் முருகனுக்கு சமயபுரம் வங்கிக் கொள்ளையிலும் தொடர்பு என விசாரணையில் தகவல்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகிறார் சவுரவ் கங்குலி. அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close