[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச
  • BREAKING-NEWS டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்
  • BREAKING-NEWS கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு
  • BREAKING-NEWS உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் எஸ்.ஏ.பாப்டே

திருநங்கைகள் போல வேடமணிந்து வழிப்பறி... 7 இளைஞர்கள் கைது..!

7-youths-arrested-in-coimbatore

கோவையில் திருநங்கைகள் போல் வேடமணிந்து, வழிப்பறியில் ஈடுபட்ட 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் விக்னேஷ் குமார். தொலைந்துபோன மாற்றுச்சான்றிதழை பெற கோவை சென்றுள்ளார். கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் சான்றிதழ் பெற, நடந்து சென்றுக்கொண்டிருந்த போது திருநங்கைகள் இரண்டு பேர் வந்து முகவரி கேட்பது போல் நடித்து விக்னேஷ் குமாரிடம் இருந்த 1000 ரூபாய் பணத்தைக் பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதனையடுத்து விக்னேஷ் குமார் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரட்டிப் பிடித்து இருவரையும் பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கவுண்டம்பாளையம் டி.வி.எஸ் நகர் பகுதியில் வசிக்கக்கூடிய அவர்கள், ஆனந்தன் என்கிற மணிகண்டன், கனி என்கிற மணி என்பது தெரியவந்தது. இருவரும் திருநங்கைகள் போல் சேலை, நகைகள் அணிந்து பெயரை மாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 1000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து, இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதேபோல், கேரள மாநிலம் பாலக்கோட்டை சேர்ந்த சவுகத் அலி என்பவர் கோவை ராம்நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 5 திருநங்கைகள், சவுகத் அலியை இடித்து தள்ளி தகராறில் ஈடுபட்டு பணம் பறிக்க முயன்று உள்ளனர். இதுகுறித்து காவல்துறையினரிடம் சவுகத் அலி புகார் அளிக்கவே, கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த விஜய், கேரள மாநிலம் நெம்மராவை சேர்ந்த ரத்தீஷ், பாலக்கோடைசேர்ந்த மணி, சிவகங்கையை சேர்ந்த சச்சின், நாகப்பட்டினத்தை சேர்ந்த கிரியா பியான்ஸ் ஆகிய 5 இளைஞர்களை போலீசார் பிடித்தனர். அவர்கள் திருநங்கைகள் போல் வேடமணிந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து 5 பேரை கைது செய்த காட்டூர் காவல்துறையினர் , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close