[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

சொத்துக்காக தாய், தந்தை கொலை.. இயற்கை மரணம் என நாடகமாடிய மகன் கைது..!

father-and-mother-killed-by-son-for-land

சொத்துக்காக தாய் தந்தையை கொலை செய்து இயற்கை மரணம் என நாடகமாடிய மகன் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அடுத்த கண்ணங்கோட்டை நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி வெள்ளையம்மாள். இவர்களுக்கு சோனைமுத்து என்ற திருமணமான மகன் உள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சோனைமுத்துவின் தகப்பனார் ஆறுமுகம் இறந்துள்ளார். அவர் இயற்கையாக மரணமடைந்ததாக கூறி அடக்கம் செய்யப்பட்டார்.

(கொலை செய்தவர்)

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சோனைமுத்துவின் தாய் வெள்ளையம்மாளும் இறந்துள்ளார். அவரும் இயற்கையாக மரணமடைந்ததாக கூறி சோனைமுத்து அடக்கம் செய்துள்ளார். சந்தேகமடைந்த கிராமத்தினர் தேவகோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், சோனை முத்துவை பிடித்து தேவகோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், தாய், தந்தை இருவரையும் கொலை செய்துவிட்டு அதனை இயற்கை மரணம் எனக் கூறி நாடகமாடியதை சோனைமுத்து ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த சோனைமுத்து அதனை இயற்கை மரணம் எனக் கூறியிருக்கிறார். அதேபோல தந்தையையும் கொலை செய்துவிட்டு, மேலிருந்து கம்பி விழுந்து இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

மேல் விசாரணையில், இவர்களின் வீட்டை கடந்து திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தேசிய நெடுஞ்சாலைக்காக ஆறுமுகத்தின் 6 சென்ட் இடம் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான நஷ்ட ஈட்டு தொகை 7 லட்ச ரூபாய் சோனை முத்துவின் தந்தை ஆறுமுகத்தின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதனை கைப்பற்ற  6 மாதங்கள் கழித்து தாயையும் கொலை செய்தது தெரியவந்தது.

வாக்குமூலத்தின் அடிப்படையில் இரண்டு பேர்களின் உடல்களும் தேவகோட்டை வட்டாச்சியர் மோஸி தாஸ் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. கொலையாளி சோனை முத்து கடந்த 2017-ம் ஆண்டு இதே பகுதியில் நடந்த மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close