[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

விளையாட்டாக போடப்பட்ட சண்டை... மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

fight-between-students-one-student-dead

(உயிரிழந்த மாணவர் திருமால்)

தேனியில் பள்ளி மாணவர்களுக்கு இடையே விளையாட்டாக போடப்பட்ட சண்டையில் ஒரு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி அருகே உள்ள அல்லி நகரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மதிய உணவு இடைவேளையின் போது, 12 வகுப்பு மாணவன் திருமால் மற்றும் அவரது நண்பன் சக்திவேல் ஆகிய இருவரும் விளையாட்டாக சண்டை போட்டுள்ளனர். அப்போது, மாணவன் சக்திவேல் தாக்கியதில் எதிர்பாராதவிதமாக திருமால் மயக்கமடைந்தார்.

இதனையடுத்து உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர், மாணவனை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது போகும் வழியிலேயே மாணவன் திருமாலின் உயிர் பிரிந்தது. இதனையடுத்து திருமாலின் உறவினர்கள் அல்லிநகரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் நடைபெற்ற நிலையில், மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினார்கள். மேலும் மாணவனை தாக்கி கொலை செய்த மாணவன் சக்திவேலை காவல் துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பள்ளியிலேயே மாணவன் உயிரிழந்த சம்பவம் தேனியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அல்லிநகரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் உயிரிழந்ததை அடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close